fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் சிவப்பு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2019 16:19

சீனாவில் சிவப்பு எச்சரிக்கை

சீனாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை நோக்கி சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சூறாவளிக்கு லெக்கிமா என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது தாய்வானில் மணிக்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் சூறாவளி நாளை சீனாவின் ஜெஜியாங் மாகாணத்த்தை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாக சீனாவின் அனர்த்த விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஷாங்காயில் கரையோர பகுதிகளில் உள்ள மேலும் ஆயிரக்கணக்கான மக்களையும் வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2019 16:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க