மாதிரி கிராமம் வேலைத்திட்டத்தின் மூலம் வவுனியாவில் மேலும் 26 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. வவுனியா சின்னகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சபரிபுரம் மாதிரி கிராமத்தில் 11 வீடுகள் உள்ளடங்குகின்றன. அகத்தியர்புரம் மாதிரி கிராமத்தில் 15 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.