பெஸ்ட் வெப் 2019 விருது வழங்கும் விழாவில் ஐ.ரி.என் டிஜிட்டல் மையம கௌரவிக்கப்பட்டது. எல்.கெ.டொமின் ரெஜிஸ்டரி நிறுவனத்தினால ஒழுங்கு செய்யப்பட்ட பெஸ்ட் வெப் 2019 விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
விருதுக்கு பாத்திரமான ஐ.ரி.என். டிஜிட்டல் மயத்திற்கான இக்கிண்ணத்தை ஐ.ரி.என் வர்ததகப்பிரிவின் பிரதிப்பொது முகாமையாளர் வஜிர குமார துங்கவினால் பெற்றுக்கொள்ளபபட்டது. டிஜிட்டல் மயத்தின் முன்னோடி இணையத்தள உருவாக்குனர்கள் கலைஞர்கள் விளம்பர துறையின் முன்னோடிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர். பல பிரிவுகளின் கீழ் இணையத்தளங்கள் கௌரவிக்கப்பட்டன.
வங்கி மற்றும் நிதிப்பிரிவின் கீழான பிரபல இணையத்தளமாக சம்பத் வங்கி விருதை தட்டிக்கொண்டதுடன் தேசிய சேமிப்பு வங்கியும விருதை தட்டிக்கொண்டது. விருதுக்கென இணையத்தளங்களை தேர்ந்தெடுப்பதற்கான முன்னணி நடுவர் குழு நடவடிக்கை எடுத்ததுடன் தொழிநுட்பம் படைப்பாற்றம் உள்ளடக்கம மற்றும் சர்வதேச செயற்பாடுகள் இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டன. நடுவர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.ரி.என தகவல தொழிநுட்ப பிரிவின் முகாமையாளர் எஸ்.பி.நோனிசும் விசேட கௌரவத்திற்கு உட்பட்டார். தொலைத் தொடர்பு டிஜிட்டல் உட்கட்;டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்க, எல்.கெ.டொமின் ரெஜிஸ்டரி நிறுவனத்தின் தலைவர் ஜயந்த பெர்னாணடோ பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் கிஹான் டயஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.