fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2019 14:42

பொறுமையும், திறமையும் கொண்ட ஹசிம் அம்லா ஓய்வு

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட சுவர் என வர்ணிக்கப்படும் அம்லா இதுவரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28 சதம் 41 அரைசதம் அடங்கலாக 9 ஆயிரத்து 282 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

தென்னாபிரிக்க அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் ஒரே இனிங்சில் முச்சதம் பெற்ற ஒரே வீரராகவும் ஹசிம் அம்லா சாதனை படைத்துள்ளார். 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 27 சதம், 39 அரைசதங்கள் அடங்கலாக 8 ஆயிரத்து 113 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

44 டுவெண்டி – 20 போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா 8 அரைசதங்கள் அடங்கலாக ஆயிரத்து 277 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற வீரரென்ற சாதனையையும் ஹசிம் அம்லா தம்வசம் வைத்துள்ளார்.

அவரது ஓய்வையடுத்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அம்லா அன்பு சாந்தியும் கொண்டவரென கிரிக்இன்போ இணையதளம் வாழ்த்தியுள்ளது. இதேவேளை ஹசிம் அம்லா முனிவர் போன்ற பொறுமையும், மாவீரன் போன்ற துடுப்பாட்ட திறமையும் கொண்டவரென இந்திய முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் வாழ்த்தியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2019 14:42

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க