இம்மாத இறுதிக்குள் புதிய அரசியல் கூட்டணி : பிரதமர் அறிவிப்பு.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2019 14:50

இம்மாத இறுதிக்குள் புதிய அரசியல் கூட்டணி : பிரதமர் அறிவிப்பு.

இம்மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டமைப்பு அமைக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் புதிய கூட்டணி அமையவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் புதிய கூட்டணி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஒரே இலக்குடன் பயணிக்கும் கூட்டணி உருவாக்கப்படும். கால மாற்றத்துடன் அரசியல் ரீதியான மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

தற்போது கூட்டணி அரசியல் யுகம் காணப்படுகிறது. சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்படவேண்டும். இல்லையெனில் கூட்டணி அமைப்பதில் பயனில்லை. ஐக்கிய தேசிய கட்சி புதிய சிந்தனையுடன் கூடிய ஜனநாயகத்தை பலப்படுத்தும் கூட்டணியை அமைக்கவே உத்தேசித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் புதிய கூட்டணி அமைக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 9, 2019 14:50

Default