சவூதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேறுமாறு சவூதி அரேபிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் மருத்துவ கல்வியின் தரம் மற்றும் பயிற்சி உரிய தகுதியில் இல்லையென சவூதி அரேபிய சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் வைத்தியர்கள் சவூதியில் பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சவூதி ஆரேபிய அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கு பணிபுரியும் பாகிஸ்தான் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.