fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2019 14:52

ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான கொள்கையை கொண்டிருப்பதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், கூகுள் நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ 2016 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் ட்ரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டதென தெரிவித்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பியதாலேயே நான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் ட்ரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்தே ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2019 14:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க