fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2019 13:31

இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று கயானாவில் நடைபெறவுள்ளது. மூன்று 20 – 20 மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதற்கமைய 20 – 20 தொடரை இந்திய அணி 3 க்கு 0 என கைப்பற்றியது. இந்நிலையில் இன்று முதலாவது ஒரு நாள் போட்டி கயானாவில் இலங்கை நேரப்படி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியும் ஜேஷன் ஹோல்டர் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணியும் விளையாடவுள்ளன.

இதேவேளை இன்றைய போட்டியில் விளையாடும் கிறிஸ் கெய்ல் 12 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் மேற்கிந்திய தீவுகள் சார்பாக ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற ப்ரைன் லாராவின் சாதனையை முறியடிக்க முடியும். லாரா 10 ஆயிரத்து 405 ஓட்டங்களை குவித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2019 13:31

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க