ரொக்கட் ஒன்றை தயாரித்து வரும் மாணவன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 14:21

ரொக்கட் ஒன்றை தயாரித்து வரும் மாணவன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய மாணவனான கிஹான் காவிந்த ஹெட்டியாராச்சி தனது பாடசாலை நூற்றாண்டு விழாவுக்கு இணைவாக இடம்பெற்ற கண்காட்சியில் தயாரித்த ரொக்கட் ஜனாதிபதியின் அவதானத்தை ஈர்த்தது. அம்மாணவனின் திறமையை அப்போது பாராட்டிய ஜனாதிபதி அவரது படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்காக முதற்கட்டமாக கடந்த ஒக்டோபர் மாதம் பத்து இலட்சம் ரூபாவை வழங்கினார்.

இதனை விண்வெளிக்கு அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே விமான படையின் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். தமது ஆக்கத்தின் முன்னேற்றத்தை விளக்குவதற்காகவே இம்மாணவன் ஜனாதிபதியை சந்தித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 14:21

Default