ஒரு வகை விதையை உட்கொண்ட 7 சிறுவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 14:07

ஒரு வகை விதையை உட்கொண்ட 7 சிறுவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

மடுல்சீமை – கொக்காகல தோட்டத்தில் ஒரு வகை விதையை உட்கொண்ட 7 சிறுவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுவர்கள் மெட்டிகாதென்ன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மடுல்சீமை கொக்காலை தோட்டத்தின் 23ம் இலக்க தொடர் குடியிருப்பில் வசிக்கும் 3 வயதுக்கும் 10 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்கள் 7 பேரே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர். குறித்த தோட்டப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சிறுவர்கள் விதையை உடகொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 14:07

Default