fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 14:11

அருவக்காட்டில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதி குப்பைகளை, அருவக்காட்டில் கொட்டுவது தொடர்பில் இன்று இணக்கப்பாடு எட்டப்படலாமென கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை கெரவலப்பிட்டிய குப்பைமேட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், குப்பைகளைக் கொட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள், வாகனங்களிலிலேயே காணப்படுவதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார். அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா கொடுப்பனவு வழங்க வேண்டுமெனவும் கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். கொடுப்பனவு தொடர்பிலும் மீண்டும் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை, அருவக்காடு கழிவகற்றல் தொகுதியில் கொட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார். இதற்கென நாளாந்தம் 600 தொன் குப்பைகளைக் கொட்டுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 14:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க