வெற்றிலைக்கேணி பகுதியில் பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவன் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 12:46

வெற்றிலைக்கேணி பகுதியில் பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவன் கைது

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் தனது பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விலக்குவதற்கு குறித்த வயோதிப பெண் முயற்சித்தபோது இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். நேற்றிரவு 16 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போதே குறித்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் தனது சகோதரனை தாக்க முற்பட்ட 16 வயது சிறுவனின் கத்திக்குத்துக்கு 72 வயதான குறித்த வயோதிப பெண் இலக்காகியுள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 12:46

Default