fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்று முதல் ஓரளவு அடை மழை பெய்யக் கூடிய சாத்தியம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 12:15

இன்று முதல் ஓரளவு அடை மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்று முதல் ஓரளவு அடை மழை பெய்யுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், காற்றின் வேகம் அதிகரிப்பதால் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென்றும் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளோர் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். அத்துடன் வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் 60 முதல் 70 வரையிலான வேகத்தில் காற்று வீசும். குறிப்பாக பகல் மற்றும் இரவு வேளைகளில் இவ்வாறு காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களி;ல் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என தெரிவித்துள்ள திணைக்களம் மன்னார், யாழ்ப்பாணம், அநுராதபுரம் மாவட்டங்களில்

மழை பெய்யுமெனவும் எதிர்வுகூறியுள்ளது. மேல், மத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 70 முதல் 80 மில்லி மீட்டர் வரையிலான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அணில்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க