fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 11:59

வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை

வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய நிலங்களையும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவநதுள்ளது. வவுனியா பெரிகுளம் பகுதியில் வசிக்கும் விவசாயிகளின் பொருளாதார வாழ்வாதாரம் தெங்கு பயிர்ச்செய்கையாகும்.

இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம் சுமார் 75 தொடக்கம் 80 வரையிலான தென்னை மரங்களையும் 15கும் மேற்பட்ட வாழை மரங்களையும் ஏராளமான மரவள்ளி செடிகளையும் சேதப்படுத்தியுள்ளன. கிணற்று நீர் மூலம் தமது பிள்ளைகள் போல் பராமறித்து வந்த தென்னம் பிள்ளைகள் அறுவடைக்கு தயாராகும் நிலையில் யானைகளினால் சேதப்படுத்தப்பட்டமையினால் விவசாயிகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உரிய நஸ்டயீடுகளும் மின்சார வேலியும் அமைத்து தர வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பென அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க