பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் ஒன்று கூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 10:52

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் ஒன்று கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் ஒன்று கூடவுள்ளதாக குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 20 மற்றும் 21ம் திகதிகளில் மீண்டும் தெரிவுக்குழுவை கூட்ட எதிர்பார்த்துள்ளதுடன் அது தொடர்பான உரிய தினம் பின்னர் அறிவிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விஷேட விசாரணை குழுவின் உறுப்பினர்கள் சாட்சியம் வழங்கவுள்ளனர். இதேவேளை தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 23ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2019 10:52

Default