ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:28

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் பத்தரமுல்லை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் 32 வயதுடைய ‘வெலிவிட சுத்தா’ எனப்படும் வசந்த திஸாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:28

Default