டேல் ஸ்டெய்ன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு
Related Articles
சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனை டெல் ஸ்டெய்ன் வசமுள்ளது. 36 வயதான டெல் ஸ்டெய்ன் தென்னாபிரிக்கா சார்பில் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதேவேளை ICC டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 263 வாரங்கள் முதலிடத்திலிருந்த வீரர் என்ற சாதனையும் இவர் வசமுள்ளது.
மேலும் கடந்த 2008ம் ஆண்டு அவர் ஐஊஊ சிறந்த டெஸ்ட் விளையாட்டு வீரராக தெரிவுசெய்யப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2004ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டெல் ஸ்டெய்ன் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலேயே இறுதியாக விளையாடினார். தான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகின்ற போதிலும் ஒருநாள் மற்றும் டுவெண்டி – 20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக டெல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.