பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார்.
அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடுகிறது. அதை பார்த்ததும் ஜெயம்ரவி இது 1996-ம் வருடம்தான் 2016 அல்ல என்கிறார். இந்த காட்சி ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கேலி செய்வது போல் உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசனும் டிரெய்லரை பார்த்து அதிருப்தி தெரிவித்தார்.
எனவே குறித்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்துகின்றமையால் ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.