fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண் வேடம் தரித்து சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதை பொருள் வர்த்தகர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 13:02

பெண் வேடம் தரித்து சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதை பொருள் வர்த்தகர் கைது

பிரபல போதை பொருள் வர்த்தகர் ஒருவர் தனது மகளாக வேடம் தரித்து, சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்ட செய்தியொன்று பிரேஸிலிலிந்து அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்வையிடுவதற்காக மகள் வருகை தந்த போது, மகளாக வேடம் தரித்து இப்போதை பொருள் வர்த்தகர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதன் போது பெண் போல் கதைப்பதற்கும் இவர் நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் கைதிகளை பார்வையிடுவதற்கு வருகை தரும் ஆண்களுக்குரிய வரிசையில் பெண் வேடம் தரித்த நிலையில் இவர் இருந்துள்ளார். இந்நடவடிக்கை குறித்து சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்ட போது, சிறைகூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இப்போதை பொருள் வர்த்தகர் மீண்டும் கைது செய்யப்பட்டார். மகளும் இதற்கு துணை போன 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க