குடிநீர் போத்தல்களுக்கு புதிய சட்டம்
Related Articles
சுற்றாடலுக்கு மதிப்பளிக்கும் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கான சட்டங்கள் பலப்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்த செயற்றிட்டமாக கம்பஹா மாவட்டத்தில் பிளாஸ்ரிக், கண்ணாடி, கடதாசி போன்ற கழிவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக 32 மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். உக்கக்கூடிய கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி பசளையை உற்பத்தி செய்வது இதன் நோக்கமாகும்.
பிளாஸ்ரிக் நீர் போத்தல்களின் மூடிகளை பிளாஸ்ரிக்கினால் பொதியிடும் நடவடிக்கை எதிர்காலத்தில் நீக்கப்படும் என்றும் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல் தரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது சம்பந்தமான புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். சுற்றாடல் அமைச்சின் அனுமதியின்றி நாட்டிற்கு கழிவு கொள்கலன்களைத் வருவித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் இவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.