fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹட்டன் டயகம தீ விபத்தில் 12 தோட்ட வீடுகள் முற்றாக நாசம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:43

ஹட்டன் டயகம தீ விபத்தில் 12 தோட்ட வீடுகள் முற்றாக நாசம்

ஹட்டன் டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திரகாமம் தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயினால் 12 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீக்கான காரணம் மின்சார ஒழுக்கு என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சந்திரகாமம் தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் 12 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்பட்ட தீ’யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தோட்ட இளைஞர்களும் பொலிஸாரும் கடும் முயற்சி செய்த போதிலும் அது பயனளிக்கவில்லை.

வீடுகளிலிருந்த பெறுமதிமிக்க அனைத்து பொருட்களும் ஆவணங்களும் தங்க நகைகளும் தீக்கு இறையாகியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் சந்திரகாமம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 10 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களுக்க தேவையான சமைத்த உணவுகள் மற்றும் நிவாரணங்களை வழங்க தோட்ட நிருவாகமும் அக்கரபத்தன பிரதேச சபையும் நடவடிக்கை எடுத்துள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க