fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:43

7500 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

கம்பளை தவுலகல கடலாதெனிய பகுதியில் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டன. சிலோன் டி எனும் வர்த்தக நாமத்தின் கீழ் தேயிலை சபையின் தரச்சான்றிதழுடன் பொதியிடப்பட்டு இக்கழிவு தேயிலை எடுத்துச் செல்லப்பட்டதாக விசேட அதிரடி படையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொள்கலனும் சந்தேக நபரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். உடுநுவர பகுதியிலேயே அதி கூடிய அளவிலான கழிவு தேயிலை கைப்பற்றப்பட்டது. இந்த கழிவு தேயிலையினால் நாட்டின் தேயிலை கைத்தொழிலுக்கு சர்வதேச ரீதியில் பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. தவுலகல பொலிஸார் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2019 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க