fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய திட்டத்தின் கம்பஹா மாவட்ட நிறைவு நாள் நிகழ்வு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:39

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய திட்டத்தின் கம்பஹா மாவட்ட நிறைவு நாள் நிகழ்வு

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய திட்டத்தின் கம்பஹா மாவட்டத்திற்கான நிறைவு நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் திவுலப்பிட்டிய பொது மைதானத்தில் இடம்பெற்றது. சட்டவிரோத போதை பொருள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை ஒருசிலர் இதுவரை புரிந்து கொள்ளவில்லையென இங்கு உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் கம்பஹா மாவட்ட செயல்த்திட்டம் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமானது. மாவட்டத்தின் 13 கிராம சேவகர் பிரிவுகளில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடந்த 8 நாட்களாக இடம்பெற்ற இத்தி;ட்டத்தின் மூலம் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் நன்மையடைந்தனர். இத்திட்டத்திற்கு சமாந்திரமாக மாவட்ட மக்களின் தயாரிப்புக்கள் அடங்கிய கண்காட்சியொன்றும் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி இங்கு உரையாற்றினார்.

அநேகமானோர் போதை பொருள் ஒழிப்பு திட்டத்தின் பொறுப்பினை சரியாக உணர்ந்து கொள்ளவில்லை. ஒருசிலர் இதனை பொருட்படுத்தாமல் உள்ளனர். நாட்டின் சிறுவர்களை பாதுகாப்பதற்காகவும் போதை பொருள் வர்த்தகம் நாடெங்கும் பரவி வருவதை தடுப்பதற்காகவும் நான் மரண தண்டனையை அமுல்படுத்த தீர்மானித்தேன். நன்மைகள் நாம் செய்ய முற்படும் போது, அதனை எதிர்ப்பவர்கள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். மரண தண்டனையை தடுப்பதற்காக பாராளுமன்றத்தில் அரசாங்கத்தினால் தனிநபர் பிரேரணையாக கொண்டு வரப்படும் பிரேரணையானது சட்டரீதியானதல்லவென சட்டமா அதிபர் அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார். இதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன்.”

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க