fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:10

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும்

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்கான காலத்தை நீடிக்கவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 5 ம் திகதி சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இன்றை தினத்துடன் அதனை நிறைவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த சுற்றிவளைப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார். கடந்த ஒரு மாத காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 7 ஆயிரத்து 144 சாரதிகள் கைதுசெய்யப்பட்டனர். வாகன விபத்துக்களை குறைக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைவாக சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் ஆயிரத்து 629 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் உயிரிழந்ததுடன் 50 க்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க