fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயினுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:09

ஹெரோயினுடன் இருவர் கைது

இராகமை, மகுல் பொக்குன பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 290 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகுல் பொக்குன பகுதியை சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை கிரான்பாஸ், ஸ்டெஸ் வீதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 10 கிராம் 10 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க