fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:55

காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழப்பு

சிரியாவில் விமானப்படை தளத்தில் காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். சம்பவம் சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் நகரில் விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கு உள்ள கிடங்கு ஒன்றில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சிரியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆயுதக்கிடங்கில் இருக்கும் காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை அகற்றும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக சிரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பல வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக சிரியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க