fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த ஆறு வருடத்தில் நாடெங்கும் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலால் சுற்றி வளைப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:46

கடந்த ஆறு வருடத்தில் நாடெங்கும் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலால் சுற்றி வளைப்புக்கள்

கடந்த ஆறு வருடத்தில் நாடெங்கும் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலால் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எச்.ஜி சுமனசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் 24 ஆயிரத்து 150 சட்டவிரோத மதுபான உற்பத்திகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு, மதுபானத்தை தம் வசம் வைத்திருந்தமை, மதுபானம் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை விற்பனை செய்தமை, சட்டவிரோதமான வெளிநாட்டு மதுபான விற்பனை என்பனவற்றிற்கு எதிராக சுற்றி வளைப்புக்கள் இடம்பெற்றன.

இதன் பிரகாரம் கடந்த வருடத்தில் மாத்திரம் 49 ஆயிரத்து 312 சுற்றி வளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மூலம் 253 மில்லியன் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளது. இவ் அபராத பணம் மாகாண சபையிடம் ஒப்படைக்கப்படும். 2015 ஆம் ஆண்டு முதல் கலால் வரி திணைக்களம் சுற்றி வளைப்புக்களை அதிகரித்திருப்பதாக அத்திணைக்களம் தெரிவிக்கின்றது. இவ்வருடம் 130 பில்லியன் ரூபா கலால் வருமானமாக பெறப்படவுள்ளத. கடந்த மாதம் 68 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo