fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம் : பாகிஸ்தான் பிரதமர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:53

காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணம் : பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய இதுவே சரியான தருணமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார. காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அப்பாவி மக்கள் மீது இந்தியா தாக்கியுள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை அமைதிக்கும், பாதுகாப்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த சர்வதேச அச்சுறுத்தல் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுமென இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய தயாரென கூறியிருந்தார். இந்நிலையில் காஷ்மீரிலும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலும் நிலைமை மோசமடைந்து வருவதால் இதுவே டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய சரியான தருணமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க