fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:39

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்களை சோதனைக்குட்படுத்தி அனுமதிப்பது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நேரில் சென்று ஆராய்ந்தனர். இவ்வாறு சோதனைக்குட்படுத்த யாழ் மாநகர சபை 3 இலட்சம் ரூபா செலவில் 8 சோதனை கூடங்களை தயாரித்துள்ளது.

எனினும் இதற்கு மேலதிகமாக 4 கூடங்கள் தேவையென பொலிஸார் தெரிவித்தனர். 25 நாட்களுக்கு நடைபெறும் நல்லூர் கந்தனின் திருவிழாவில் இம்முறையும் பல இலட்சம் அடியார்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமை போன்று வீதி மறியல்கள், போடப்பட்டுள்ள போதிலும் ஏப்ரல் 21 தாக்குதலை காரணம் காட்டி சோதனை சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க