கண்டி எசலா பெரஹரா ஊர்வலம் இன்று ஆரம்பமாகிறது. பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பல்லாயிரக்கணக்கானோர் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று ஆரம்பமாகும் திருவிழா எதிர்வரும் பத்து நாட்கள் வரை இடம்பெறும். 1000 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பெரஹரவில் பங்கேற்பதுடன் 50 யானைகள் பெரஹராவில் கலந்து கொள்ளவுள்ளதாக கண்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ், முப்படை, விஷேட அதிரடிப்படை ஆகியன இணைந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. வீதி தடைகளுடன் நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் நிலையான கண்காணிப்பு தொடந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தலதா மாளிகை மற்றும் நகரத்தை சூழவுள்ள பிரதேசங்களில் சிறப்பு சோதனைகள் மற்றும் நடமாடும் சோதனைச் சாவடிகள் என்பன ஏற்படுத்தப்படவுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மூலமான ரோந்துப்பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வருடாந்த உட்சவத்தை முன்னிட்டு உயர்ந்தபட் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ஷான்ந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் அச்சமின்றி கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வருடாந்த உட்சவத்தில் கலந்துகொள்ள முடியமென அவர் தெரிவித்தார்.