3 ஆளுநர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இருவர் சத்தியப்பிரமாணம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:44

3 ஆளுநர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இருவர் சத்தியப்பிரமாணம்

3 ஆளுநர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மத்திய மாகாண ஆளுநராக ரஜித கீர்த்தி தென்னகோன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் ஊவா மாகாண ஆளுநராக மைத்ரி குணரத்ன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஹேமால் குணசேர தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை புதிதாக ராஜாங்க அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் திருமதி அநோமா கமகே பெற்றோலிய வளத்துறை ராஜாங்க அமைச்சராகவும் லக்கி ஜயவர்தன நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி ராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 11:44

Default