fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:38

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 31 ம் திகதி வரை பரீட்சை இடம்பெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 28 ம் திகதி முதல் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொது அறிவுப்பரீட்சை ஒக்டோபர் மாதம் 7 மற்றும் 8 ம் திகதிகளில் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தர பரீட்சை 2 ஆயிரத்து 678 மத்திய நிலையங்களில் இடம்பெறுகிறது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த 3 இலட்சத்து 33 ஆயிரத்து 707 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். நாடளாவிய ரீதியில் 315 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உயர்தர பரீட்சைக்கான அலுவலகப் பணிகளில் 15 ஆயிரம் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பரீட்சை மண்டபத்திற்கென மேலதிக மண்டப பொறுப்பாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை பரீட்சை மத்திய நிலையங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரத்து 971 பொலிசார் இதற்கென கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பரீட்சைகள் தொடர்பில் எந்தவொரு முறைப்பாட்டையும் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அல்லது பொலிஸ் அவசர இலக்கமான 119 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்தும் பரீட்சைகள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் தெரிவிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களின் நலன் கருதி போதுமான பஸ்களும் நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பீ.எச்.ஆர். ரியுடர் சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 5, 2019 10:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க