புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆம் திகதி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:57

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆம் திகதி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும். இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை நாடு முழுவதிலும் 2,678 மத்திய நிலையங்களில் இடம்பெறும்.

3 இலட்சத்து 34 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்கு இம்முறை தோற்றுகின்றனர். பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சை இடம்பெறும். பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடத்தில் விதி முறைகளை மீறிய 229 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:57

Default