fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனா மீதான வரி கட்டணத்தை மீண்டும் அதிகரித்தது அமெரிக்கா

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:48

சீனா மீதான வரி கட்டணத்தை மீண்டும் அதிகரித்தது அமெரிக்கா

சீனா மீது புதிய வரி கட்டணங்களை சுமத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுமார் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன வர்த்தக பொருட்கள் மீது குறித்த புதிய வரி தாக்கம் செலுத்துமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய சீனாவிற்கு எதிராக புதிதாக மேலும் 10 வீத வரி கட்டணம் விதிக்கப்படவுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் ஏற்ப்பட்டுள்ள வர்த்தக போரின் உச்ச கட்டமாக இது அமைந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க மற்றும் சீனாவிற்கிடையில் அண்மையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

பேச்சுவார்த்தைகளின் திருப்புமுனையாக புதிய வரி விதிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த வரி கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன வர்த்தக பொருட்கள் மீதான வரியும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo