மேலும் 680 பட்டதாரிகளுக்கு இன்றைய தினம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கண்டி மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளுக்கே நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களை உள்ளடக்கும் வகையில் பட்டதாரிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 800 பேரை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நியமனம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தலைமையில் இடம்பெறும்.

மேலும் 680 பட்டதாரிகளுக்கு இன்றைய தினம் நியமனங்கள்
படிக்க 0 நிமிடங்கள்