சிலாபம் தலவில புனித அன்னம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று கொண்டபடப்படுகிறது. இன்று காலை 07.00 மணிக்கு விசேட திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. சிலாபம் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி இடம்பெற்றது.
ஆராதனை நிறைவில் புனித அன்னம்மாளின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. திருவிழாவை முன்னிட்டு வருகைத்தந்துள்ள யாத்திரீகர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 27ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 9 தினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு, இன்றைய விசேட திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.