fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளைய தினம் முதல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்துக்குரியதென அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:14

நாளைய தினம் முதல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்துக்குரியதென அறிவிப்பு

வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நாளைய தினம் முதல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்துக்குரியதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கமைய கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படுமென மத்திய நிலையத்தில் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் சில நாட்களுக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றின் வேகமானது மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் முதல் 11ம் திகதி வரை மீன்பிடி மற்றும் கடல்சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆபத்துக்குரியதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை எதிர்வரும் சில தினங்களுக்கு வடமாகாணத்தில் கடும் காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 4, 2019 15:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க