காலி – கொழும்பு பிரதான வீதியின் வஸ்கடுவ முச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 52 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மூன்று பெண்களும், மூன்று ஆண்களுமே உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 8 பெண்கள் உள்ளடங்குவதாக களுத்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எல்ப்பிட்டியவிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியும், காலி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.