ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெசிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ஜென்டினா தகவல்கள் தெரிவிக்கின்றன. 32 வயதான லயனல் மெசி பாசிலோனா கால்பந்து கழக அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
அண்மையில் இடம்பெற்ற கொப்பா அமெரிக்க போட்டித் தொடர் பிரேசில் அணிக்கு ஆதரவாக செயற்படுவதாக மெசி குற்றச்சாட்டு முன்வைத்தார். ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த காரணத்தினால் அவருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு 3 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 50 ஆயிரம் அமெரிக்க டொலரும் அபராதமாக விதிக்கப்பட்டதாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.