ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான புதிய சட்டங்கள் அடங்கிய பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய சட்டமூலம் எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது மேற்பார்வை செயற்குழுவில் முன்வைக்கப்படுமென ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் புதிய ஊழல் தடுப்பு சட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிக விரைவில் புதிய சட்டமூலத்திற்கு அனுமதியை பெற்று அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.