fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையர்கள் 9 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 13:26

3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையர்கள் 9 பேர் கைது

3 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையர்கள் 9 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேங்கொக் நகரிலிருந்து சட்டவிரோதமாக தங்கத்தை நாட்டிற்கு எடுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட 4 கிலோ கிராமுக்கும் அதிக எடைகொண்ட தங்கத்தை அரச உடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் வத்தளை, கடவத்தை மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்கென சந்தேக நபர்களை சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 13:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க