பிரதான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட போக்குவரத்து தாமதம் வழமை
Related Articles
பிரதான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட போக்குவரத்து தாமதம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அலவ்வ மற்றும் பொல்கஹவெல பகுதிகளுக்கு இடையிலுள்ள அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரயிலொன்று சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டது.
இதனால் பிரதான ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிப்படைந்தன. எனினும் தற்போது நிலமை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாமதமடைந்த ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.