சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களுடன் நபர் ஒருவர் கைது
Related Articles
மாபாகே – தொட்டுபொல பகுதியில் அமைந்துள்ள களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கோடா 3037 லிட்டர் மற்றும் 500 மில்லி லிட்டர் மதுபானங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட கோடா மதுபானம் சுமார் 15 பீப்பாய்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் ராகமாவில் வசிக்கும் 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்திற்கான வட பகுதி குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.