செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் கீழ் மேலும் இரு கிராமங்கள் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 13:21

செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் கீழ் மேலும் இரு கிராமங்கள் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு

செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தின் கீழ் மேலும் இரு கிராமங்கள் இன்றைய தினம் மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டன. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. திட்டத்தின் 233 வது மற்றும் 234 வது கிராமங்களே இவ்வாறு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி நகர் மற்றும் அப்துல் காதர் என்ற பெயர்களில் குறித்த கிராமங்கள்ள அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நிர்மாணங்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியும் கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காந்தி நகர் கிராமத்தில் 27 வீடுகளும் அப்துல் காதர் கிராமத்தில் 30 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளடங்கும் வகையில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 13:21

Default