fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 13:14

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வாரியபொல – குருநாகல் வீதியில் இபியன்கொட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் வண்டி என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க