5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 13:09

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை

5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

2 ஆயிரத்து 995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி 1 வினாத்தாளுக்கு விடையளிக்க காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்படும். பகுதி 2 க்கு விடையளிக்க முற்பகல் 10.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சந்தர்ப்பம் வழங்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 13:09

Default