அரசாங்கம் பல வருட அபிவிருத்தியை ஒரு வருடத்தில் நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறி நான்கு வருடங்களில் கொழும்பில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணித்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.
எதிர்வரும் சில மாதங்களில் ஐய்யாயிரம் வீடுகள் பொதுமக்களிடம் வழங்கப்படும். மேலும் 6 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.