அக்குரணை ஷியா வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த ஆலோசனை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 12:50

அக்குரணை ஷியா வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த ஆலோசனை

அக்குரணை ஷியா வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

ஷியா வைத்தியசாலையில் 43 மில்லியன் ரூபா செலவில் சிகிச்சை சேவை கட்டடம் நிர்மாணிக்கப்பட்;டுள்ளது. அதை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு குறிப்பிட்டார்.

1920 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அக்குரணை ஷியா வைத்தியசாலைக்கு பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஷியாஉல் ஹக் பாரிய உதவிகளை வழங்கினார். வளப்பற்றாக்குறையுடன் காணப்பட்ட ஷியா வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் ஷியா வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2019 12:50

Default