fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தடைகளை பொருட்படுத்தாமல் போதை பொருளுக்கு எதிரான போராட்டம் தொடரும் ஜனாதிபதி சூளுரைப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 19:07

தடைகளை பொருட்படுத்தாமல் போதை பொருளுக்கு எதிரான போராட்டம் தொடரும் ஜனாதிபதி சூளுரைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்காத சிலர் மரண தண்டனையை தடுப்பதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போதை பொருளை தொனிப்பொருளாக கொண்டு இடம்பெற்ற வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆக்கபோட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் இன்று குருநாகல் சேர் கொத்தலாவல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. போதையில் இருந்து விடுபடுவோம் மகிழ்ச்சியாக இருப்போம் எனும் தொனிப்பொருளில் இப்போட்டிகள் இடம்பெற்றன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் போதை பொருள் பாவனையற்ற நாடு ஒன்றை உருவாக்கும் கோட்பாடுகளுக்கு இணங்க தேசிய போதை பொருள் ஒழிப்பு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அவர்களை போதை பொருள் பாவனைக்கு எதிராக அணிதிரட்டுவதே இதன் நோக்கமாகும்.

வட்டார மற்றும் மாகாண மட்டத்தில் கட்டுரை, சிறுகதை, ஓவியம், பேச்சு, குருநாடகம், குருந்திரைப்படம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற 1036 மாணவ மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபலால சிறிசேன தமது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தும் திறமை போதை பொருள் வர்த்தகர்களுக்கு இருப்பதன் காரணமாகவே சர்வதேச தலைவர்கள் அவர்களுக்கு எதிராக அணிதிரள மறுக்கின்றார்கள் என தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 19:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க