சடலங்களை பதப்படுத்தும் பேர்மலிங் பதார்த்தம் உணவில் சேர்ப்பு : தடுக்க அதிரடி நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 16:25

சடலங்களை பதப்படுத்தும் பேர்மலிங் பதார்த்தம் உணவில் சேர்ப்பு : தடுக்க அதிரடி நடவடிக்கை

நாட்டிலுள்ள சகல மலர்ச்சாலைகளையும் பதிவுசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போர்மலிங் எனப்படும் இரசாயன பதார்த்தத்தை விநியோகிக்கும் உரிமையை அரச வணிக கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. போர்மலிங் இரசாயனம் பூதவுடல்களை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

எனினும் குறித்த இரசாயனத்தை பயன்படுத்தி உணவுப்பொருட்களும் பதப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண குற்றம் சுமத்தியுள்ளார். மலர்சாலைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் போர்மலிங் இரசாயன பதார்த்தம் உணவு பதப்படுத்துவதற்காக வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

கருவாடு, நெத்தலி, மாசி, பழ வகைகள் மற்றும் மரக்கறி போன்றவற்றை பதப்படுத்த போர்மலிங் பதார்த்தத்தை பயன்படுத்தியுள்ளனர். சந்தையில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழம், மாம்பழம் போன்றவை மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.

இரண்டு, மூன்று வாரங்களுக்கு அவை எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றன. போர்மலிங் பதார்த்தம் பயன்படுத்தப்பட்டமையே இதற்கு காரணமாகும். இதனால் போர்மலிங் விநியோகிக்கும் ஏகபோக உரிமையை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. எதிர்காலத்தில் பதிவுசெய்யப்படும் மலர்சாலைகளுக்கு தேவையான அளவு மாத்திரமே விநியோகிக்கப்படும். இதன்மூலம் உணவுப்பொருட்களை பதப்படுத்த போர்மலிங் பயன்படுத்துவதை தடுக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2019 16:25

Default